Album | Dharma Devan |
Director | A.L.N. Mohan |
Producer | K. Krishnan Jambunathan |
Composer | Sankar Ganesh |
Starring | Murali, Saroja Devi B, S.S. Chandran, Charlie |
Actor | Murali |
Singers | K S Chithra, Chorus |
Lyricist | Vaali |
Release Year | 1989 |
Singers : K. S. Chithra And Chorus
Music By : Sankar Ganesh
Female : Kannumilla Kaadhumilla
Kaiyum Illa Kaalum Illa
Naetru Varaiyinilae
Female : Kannum Undu Kaadhum Undu
Kaiyum Undu Kaalum Undu
Indru Vaazhkaiyilae
Oru Devan Ingae Pirandhan
Engal Kannai Avan Than Thiranthaan
Female : Kannum Undu Kaadhum Undu
Kaiyum Undu Kaalum Undu
Indru Vaazhkaiyilae
Female : Guhanukku Panniru Kannu
Appan Sivanukku Irandadhu Onnu
Ezhaikku Vaaithathu Irandu
Andha Irandumae Ponadhu Irundu
Female : Sabathai Pavathai
Janaki Naayagan Maatri Veithaan
Kannoli Polavae
Kalviyin Deebathai Yaetri Vaithaan
Female : Engal Deivam Ingae Yaaru
Nenjil Vaazhum Mgraaruuu
Chorus : Engal Deivam Ingae Yaaru
Nenjil Vaazhum Mgraaruuu
All : Kannum Undu Kaadhum Undu
Kaiyum Undu Kaalum Undu
Indru Vaazhkaiyilae
Chorus : Lalalalalalala…..
Female : Oonangal Ezhaiyai Varutha
Andha Urupugal Seyarkkaiyilae Porutha
Aanaigal Pottavan Nenjam
Pettra Annaiyin Anbaiyum Minjum
Female : Sevidargal Kettitida
Kaadholi Karuvigal Koduthavanaam
Pillaigal Padithida
Sorudan Seerudai Alithavanaam
Female : Engal Deivam Ingae Yaaru
Nenjil Vaazhum Mgraaruuu
Chorus : Engal Deivam Ingae Yaaru
Nenjil Vaazhum Mgraaruuu
All : Kannum Undu Kaadhum Undu
Kaiyum Undu Kaalum Undu
Indru Vaazhkaiyilae
Chorus : Lalalalalalala…..
Female : Ponn Mana Semmalai Kattum
Engal Janaki Annaiyin Thottram
Thaai Thandhai Boomiyil Emakku
Ivar Vadivathil Thaan Ingu Irukku
Female : Koyilin Deivangal
Oomaigal Pol Ingu Irukkaiyilae
Oomaigal Pesida
Udhavidum Deivangal Ivargal Amma
Female : Engal Thalaiva Naalum Vaazhga
Engal Thaayae Neeyum Vaazhga
Engal Thalaiva Naalum Vaazhga
Engal Thaayae Neeyum Vaazhga
Chorus : Kannumilla Kaadhumilla
Kaiyum Illa Kaalum Illa
Naetru Varaiyinilae
Female : Kannum Undu Kaadhum Undu
Kaiyum Undu Kaalum Undu
Indru Vaazhkaiyilae
All : Oru Devan Ingae Pirandhan
Engal Kannai Avan Than Thiranthaan
Oru Devan Ingae Pirandhan
Engal Kannai Avan Than Thiranthaan
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் குழு
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : கண்ணுமில்ல காதுமில்ல
கையுமில்ல காலுமில்ல
நேற்று வரையினிலே
பெண் : கண்ணும் உண்டு காதும் உண்டு
கையும் உண்டு காலும் உண்டு
இன்று வாழ்க்கையிலே
பெண் : ஒரு தேவன் இங்கே பிறந்தான்
எங்கள் கண்ணை அவன்தான் திறந்தான்
பெண் : கண்ணும் உண்டு காதும் உண்டு
கையும் உண்டு காலும் உண்டு
இன்று வாழ்க்கையிலே..
பெண் : குகனுக்கு பன்னிரு கண்ணு
அப்பன் சிவனுக்கு இரண்டது ஒண்ணு
ஏழைக்கு வாய்த்தது இரண்டு அந்த
இரண்டுமே போனது இருண்டு
பெண் : சாபத்தை பாவத்தை
ஜானகி நாயகன் மாற்றி வைத்தான்
கண்ணொளி போலவே
கல்வியின் தீபத்தை ஏற்றி வைத்தான்
பெண் : எங்கள் தெய்வம் இங்கே யாரு
நெஞ்சில் வாழும் எம்.ஜி.ஆரு
குழு : எங்கள் தெய்வம் இங்கே யாரு
நெஞ்சில் வாழும் எம்.ஜி.ஆரு
அனைவரும் : கண்ணும் உண்டு காதும் உண்டு
கையும் உண்டு காலும் உண்டு
இன்று வாழ்க்கையிலே..
குழு : லாலாலாலா..
பெண் : ஊனங்கள் ஏழையை வறுத்த
அந்த உறுப்புகள் செயற்கையில் பொருத்த
ஆணைகள் போட்டவன் நெஞ்சம்
பெற்ற அன்னையின் அன்பையும் மிஞ்சும்
பெண் : செவிடர்கள் கேட்டிட
காதொலி கருவிகள் கொடுத்தவனாம்
பிள்ளைகள் படித்திட
சோறுடன் சீருடை அளித்தவனாம்
பெண் : எங்கள் தெய்வம் இங்கே யாரு
நெஞ்சில் வாழும் எம்.ஜி.ஆரு
குழு : எங்கள் தெய்வம் இங்கே யாரு
நெஞ்சில் வாழும் எம்.ஜி.ஆரு
அனைவரும் : கண்ணும் உண்டு காதும் உண்டு
கையும் உண்டு காலும் உண்டு
இன்று வாழ்க்கையிலே..
குழு : லாலாலாலா..
பெண் : பொன்மனச் செம்மலைக் காட்டும்
எங்கள் ஜானகி அன்னையின் தோற்றம்
தாய் தந்தை பூமியில் எமக்கு
இவர் வடிவத்தில்தான் இங்கு இருக்கு
பெண் : கோயிலின் தெய்வங்கள்
ஊமைகள் போல் இங்கு இருக்கையிலே
ஊமைகள் பேசிட
உதவிடும் தெய்வங்கள் இவர்களம்மா
பெண் : எங்கள் தலைவா நாளும் வாழ்க
எங்கள் தாயே நீயும் வாழ்க
எங்கள் தலைவா நாளும் வாழ்க
எங்கள் தாயே நீயும் வாழ்க
குழு : கண்ணுமில்ல காதுமில்ல
கையுமில்ல காலுமில்ல
நேற்று வரையினிலே
பெண் : கண்ணும் உண்டு காதும் உண்டு
கையும் உண்டு காலும் உண்டு
இன்று வாழ்க்கையிலே
அனைவரும் : ஒரு தேவன் இங்கே பிறந்தான்
எங்கள் கண்ணை அவன்தான் திறந்தான்…
ஒரு தேவன் இங்கே பிறந்தான்
எங்கள் கண்ணை அவன்தான் திறந்தான்…