Album | Ore Mutham |
Director | C.A.mugilan |
Producer | Sheshmal V.jain |
Composer | Ilaiyaraaja |
Starring | Srikanth, Sumithra, Jaiganesh |
Actor | Srikanth |
Singers | S P Balasubrahmanyam, S Janaki |
Lyricist | Kannadasan |
Release Year | 1980 |
Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki
Music By : Ilayaraja
Male : Paavaiyargal Maan Polae Kaaviriyin Meen Polae
Paavaiyargal Maan Polae Kaaviriyin Meen Polae
Vaazhum Vagai Vaazhndhaalae Dhevadhaikkum Melaagum
Naagariga Kolam Enna Kolam Aagumo
Male : Paavaiyargal Maan Polae Kaaviriyin Meen Polae
Male : Vaari Vittu Pinnal Podungal
Vaasamulla Poovai Choodungal
Poovai Choodungal Aa.. Aa.. Aa.. Aa.. Aa.. Aa..
Male : Pon Nagaiyilum Udaiyilum Azhagillai Pennae
Punnagaiyilum Nadaiyilum Sugam Undu Kannae
Padithu Padithu Uraitha Thamizhai Padithidungal
Male : Paavaiyargal Maan Polae Kaaviriyin Meen Polae
Paavaiyargal Maan Polae Kaaviriyin Meen Polae
Female : Nalladhor Penmani Kaattilum Vaazhalaam
Dhaasiyin Veettilum Naermaiyaai Vaazhalaam
Naan Thannai Unarndha Mangai
Naan Punidham Nirandha Gangai
Ennai Thirutha Enakku Yaarum Thaevai Illai
Female : Nalladhor Penmani Kaattilum Vaazhalaam
Male : Pattu Chaelai Kattum Podhae Vaanam Kaaval Nirkkum
Pottum Poovum Vaikkum Podhae Dheivam Thaedi Varum
Adhu Thaan Neengalaa Sariyaai Sollungal
Male : Pattu Chaelai Kattum Podhae Vaanam Kaaval Nirkkum
Female : Dheivam Ingae Vandhaal Kooda
Ennai Serthu Kollum
Kaalam Pogum Pokkai Paarthu
Konjam Maara Chollum
Sariyaai Paarungal Illaiyael Kaelungal
Female : Dheivam Ingae Vandhaal Kooda
Ennai Serthu Kollum
Male : Nilam Paarthu Nadappaalae Andaiya Kaalathu Pengal
Mugam Paarthu Sirikkindraal Indraiya Kaalathu Pengal
Pombala Sirippenna Pogaiyila Virippenna
Male : Pattu Chaelai Kattum Podhae Vaanam Kaaval Nirkkum
Female : Kurai Yaedhum Irundhaalae
Sollungal Thirutthi Kolvaen
Unnidathil Kurai Irundhaal
Naan Adhai Eduthu Solvaen
Aangalum Pengalum Sari Samam Aagumandro
Both : Engum Undu Edhilum Undu Nanmai Theemaigalae
Paadum Podhu Edhaiyo Solvom Yaarum Nanbargalae
Ulagai Arivom Ondraai Inaivom
Both : Engum Undu Edhilum Undu Nanmai Theemaigalae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பாவையர்கள் மான் போலே
காவிரியின் நீர் போலே
பாவையர்கள் மான் போலே காவிரியின் நீர் போலே
வாழும் வகை வாழ்ந்தாலே தேவதைக்கும் மேலாகும்
நாகரிக கோலம் என்ன கோலம் ஆகுமோ
ஆண் : பாவையர்கள் மான் போலே
காவிரியின் நீர் போலே
ஆண் : வாரி விட்டுப் பின்னல் போடுங்கள்
வாசமுள்ள பூவைச் சூடுங்கள்
பூவைச் சூடுங்கள்
ஆ….ஆ…ஆ….ஆ…ஆ..ஆ..
ஆண் : பொன் நகையிலும் உடையிலும்
அழகில்லை பெண்ணே
புன்னகையிலும் நடையிலும் சுகம் உண்டு கண்ணே
படித்துப் படித்து உரைத்த தமிழைப் படித்திடுங்கள்
ஆண் : பாவையர்கள் மான் போலே
காவிரியின் நீர் போலே
பாவையர்கள் மான் போலே
காவிரியின் நீர் போலே
பெண் : நல்லதோர் பெண்மணி காட்டிலும் வாழலாம்
தாசியின் வீட்டிலும் நேர்மையாய் வாழலாம்
நான் தன்னை உணர்ந்த மங்கை
நான் புனிதம் நிறைந்த கங்கை
எனைத் திருத்த எனக்கு யாரும் தேவையில்லை
பெண் : நல்லதோர் பெண்மணி காட்டிலும் வாழலாம்
ஆண் : பட்டுச் சேலை கட்டும் போதே
வானம் காவல் நிற்கும்
பொட்டும் பூவும் வைக்கும் போதே
தெய்வம் தேடி வரும்
அதுதான் நீங்களா சரியாய் சொல்லுங்கள்
ஆண் : பட்டுச் சேலை கட்டும் போதே
வானம் காவல் நிற்கும்
பெண் : தெய்வம் இங்கே வந்தால் கூட
என்னைச் சேர்த்துக் கொள்ளும்
காலம் போகும் போக்கை பார்த்து
கொஞ்சம் மாறச் சொல்லும்
சரியாய் பாருங்கள் இல்லையேல் கேளுங்கள்
பெண் : தெய்வம் இங்கே வந்தால் கூட
என்னைச் சேர்த்துக் கொள்ளும்
ஆண் : நிலம் பார்த்து நடப்பாளே
அன்றைய காலத்துப் பெண்கள்
முகம் பார்த்து சிரிக்கின்றாள்
இன்றைய காலத்துப் பெண்கள்
பொம்பள சிரிப்பென்ன பொகையில விரிப்பென்ன
ஆண் : பட்டுச் சேலை கட்டும் போதே
வானம் காவல் நிற்கும்
பெண் : குறை ஏதும் இருந்தாலே
சொல்லுங்கள் திருத்திக் கொள்வேன்
உன்னிடத்தில் குறை இருந்தால்
நான் அதை எடுத்துச் சொல்வேன்
ஆண்களும் பெண்களும் சரி சமம் ஆகுமன்றோ
இருவர் : எங்கும் உண்டு எதிலும் உண்டு
நன்மை தீமைகளே
பாடும் போது எதையோ சொல்வோம்
யாரும் நண்பர்களே
உலகை அறிவோம் ஒன்றாய் இணைவோம்
இருவர் : எங்கும் உண்டு எதிலும் உண்டு
நன்மை தீமைகளே