Album | Innisai Mazhai |
Director | Shoba Chandrasekhar |
Producer | Joseph Vijay |
Composer | Ilaiyaraaja |
Starring | Neeraj, Parveen, Vivek, Sudhakar |
Actor | Neeraj |
Singers | S P Balasubrahmanyam, S Janaki |
Lyricist | Vaali |
Release Year | 1992 |
Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki
Music By : Ilayaraja
Female : Vaa Vaa.. Aa.. Mannavaa.. Aa..
Vaa Vaa.. Aa.. Mannavaa.. Aa..
Female : Vaa Vaa Mannavaa Vaasal Thaedi Vaa
Vaa Vaa Mannavaa Vaasal Thaedi Vaa
Vaanam Illaiyael Vaadum Vennilaa
Female : Vaa Vaa Mannavaa
Vaa Vaa.. Aa.. Mannavaa.. Aa..
Female : O.. Uravai Oru Siluvaiyai Polae
Uyiril Dhinam Sumappadhanaalae
Iravil Vizhi Thuyilvadhum Illai
Isaiyai Manam Payilvadhum Illai
Female : Veenaiyum Viralgalum Vilagiyae Vaazhumaa
Vilaginaal Thandhigal Thaen Isai Vaarkkumaa
Vizhiyil Vazhi Vazhindhadhu Kanneer
Vaeril Vandhu Vizhundhadhu Venneer
Udalil Oru Unarchiyum Illai
Manadhil Oru Magizhchiyum Illai
Female : Aadalum Paadalum Nee Tharum Seedhanam
Thendral Nee Illaiyael Pookkumaa Poo Vanam
Vaavaa Vaavaa Anbae..
Male : Vaa Vaa.. Kanmani..
Vaa Vaa.. Aa.. Kanmani..
Male : Vaa Vaa Kanmani Vaasal Thaedi Vaa
Vaa Vaa Kanmani Vaasal Thaedi Vaa
Vaanam Illaiyael Vaadum Vennilaa
Male : Vaa Vaa Kanmani Vaasal Thaedi Vaa
Vaa Vaa Kanmani
Male : Aa.. Aa.. Marandhu Vidu Pirivennum Sollai
Pirivu Indha Piraviyil Illai
Uravil Ingu Namakkoru Ellai
Vaguthu Vaikka Oruvanum Illai
Female : Aanaigal Iduvadhaal Alai Kadal Adangumaa
Male : Kudaigalai Virippadhaal Adai Mazhai Nadungumaa
Female : Thanalil Vaitha Mezhugena Ingu
Thavitha Manam Pizhaithadhu Indru
Thalaivan Undhan Varugaiyai Kandu
Thanimai Ingu Vidai Perum Indru
Male : Kaadhalin Kaaviyam Kaalathai Velvadhu
Female : Maeniyai Nizhal Thoda Yaar Enna Solvadhu
Vaavaa Vaavaa Anbae..
Male : Vaa Vaa Kanmani Vaasal Thaedi Vaa
Female : Vaa Vaa Mannavaa Vaasal Thaedi Vaa
Male : Vaanam Illaiyael Vaadum Vennilaa
Female : Vaa Vaa Mannavaa Vaasal Thaedi Vaa
Vaa Vaa Mannavaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : வா வா.. ஆ.. மன்னவா.. ஆ..
வா வா.. ஆ.. மன்னவா.. ஆ..
பெண் : வா வா மன்னவா வாசல் தேடி வா
வா வா மன்னவா வாசல் தேடி வா
வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா
பெண் : வா வா மன்னவா
வா வா.. ஆ.. மன்னவா.. ஆ..
பெண் : ஓ.. உறவை ஒரு சிலுவையப் போலே
உயிரில் தினம் சுமப்பதனாலே
இரவில் விழி துயில்வதும் இல்லை
இசையை மனம் பயில்வதும் இல்லை
பெண் : வீணையும் விரலகளும் விலகியே வாழுமா
விலகினால் தந்திகள் தேன் இசை வார்க்குமா
விழியில் வழி வழிந்தது கண்ணீர்
வேரில் வந்து விழுந்தது வெந்நீர்
உடலில் ஒரு உணர்ச்சியும் இல்லை
மனதில் ஒரு மகிழ்ச்சியும் இல்லை
பெண் : ஆடலும் பாடலும் நீ தரும் சீதனம்
தென்றல் நீ இல்லையேல் பூக்குமா பூ வனம்
வாவா வாவா அன்பே..
ஆண் : வா வா.. கண்மணி..
வா வா.. ஆ.. கண்மணி..
ஆண் : வா வா கண்மணி வாசல் தேடி வா
வா வா கண்மணி வாசல் தேடி வா
வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா
ஆண் : வா வா கண்மணி வாசல் தேடி வா
வா வா கண்மணி…
ஆண் : ஆ.. ஆ.. மறந்து விடு பிரிவென்னும் சொல்லை
பிரிவு இந்தப் பிறவியில் இல்லை
உறவில் இங்கு நமக்கொரு எல்லை
வகுத்து வைக்க ஒருவனும் இல்லை
பெண் : ஆணைகள் இடுவதால்
அலை கடல் அடங்குமா
ஆண் : குடைகளை விரிப்பதால்
அடை மழை நடுங்குமா
பெண் : தனலில் வைத்த மெழுகென இங்கு
தவித்த மனம் பிழைத்தது இன்று
தலைவன் உந்தன் வருகையைக் கண்டு
தனிமை இங்கு விடை பெறும் இன்று
ஆண் : காதலின் காவியம் காலத்தை வெல்வது
பெண் : மேனியை நிழல் தொட
யார் என்ன சொல்வது
வாவா வாவா அன்பே..
ஆண் : வா வா கண்மணி வாசல் தேடி வா
பெண் : வா வா மன்னவா வாசல் தேடி வா
ஆண் : வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா
பெண் : வா வா மன்னவா வாசல் தேடி வா
வா வா மன்னவா