Album | Pudhumai Penn |
Director | Bharathiraja |
Producer | M. Saravanan |
Composer | Ilaiyaraaja |
Starring | Pandiyan, Revathi |
Actor | Pandiyan |
Singers | Ilayaraja |
Lyricist | Vairamuthu |
Release Year | 1984 |
Singer : Ilayaraja
Music By : Ilayaraja
Male : Aalamara Ponthukkulla
Vaazhavantha Kuruvigalaa
Kaaththiruntha Vedan Ingae
Kanni Vachaaan Ariveegaalaa
Pen Kuruvi Sikkidumaa Adhu
Manthiraththil Sokkidumaa…hoi
Pen Kuruvi Sikkidumaa Adhu
Manthiraththil Sokkidumaa…hoi
Male : Kanniyila Sikkaathaiyaa
Kaanaangkurivi Rosakkaara Kuruvi
Paththini Ponnu Iva
Paaththaak Kurinji Kitta Vanthaa Nerunji
Male : Kanniyila Sikkaathaiyaa
Kaanaangkurivi Rosakkaara Kuruvi
Paththini Ponnu Iva
Paaththaak Kurinji Kitta Vanthaa Nerunji…hoi
Male : Andamengum Mazhayum Adikka
Mandapaththil Edamungkudukka
Onda Vantha Thiruttuchchaami
Madaththa Pudunguraan
Male : Saathi Sanam Arugil Irukka
Santharppamum Nelunju Kodukka
Puththi Ketta Periya Manushan
Puduvai Thiruduraan
Male : Thaali Katti Vachcha Payathaan
Vaeli Katti Vaikka Maranthaan
Thanthanaanaa Thanthana Thanthaana
Thanthanaanaa Thanthana Thanthaana
Kaamang Konda Aama Onnu
Poonthiruchchu Veettukkulla
Karparasi Kannagikku Thangai
Intha Chinnappulla…hoi…
Thanthana….thanthana…
Thanthana..thanthana…naa..
Male : Kanniyila Sikkaathaiyaa
Kaanaangkurivi Rosakkaara Kuruvi
Paththini Ponnu Iva
Paaththaak Kurinji Kitta Vanthaa Nerunji..
Male : Kovanaththil Iruntha Pozhuthum
Gopuraththil Iruntha Pozhuthum
Adhukkoru Mathippu Illa
Azhukku Azhukkuthaan
Male : Seethamagal Azhutha Kanakku
Thegamengum Neriya Irukku
Innamathu Mudiyavilla
Vazhakku Vazhakkuththaan
Male : Enga Ooru Ponnu Appothey
Suriyana Katti Vachchaalae
Enga Ooru Ponnu Appothey
Suriyana Katti Vachchaalae
Suththmulla Uththamithaan
Theeyeduththu Suttu Vachcaa
Paththininga Paadhaiyila
Enga Ponnu Ettu Vachcha…toyaa
Thanthana….thanthana…
Thanthana..thanthana…naa..
Male : {Kanniyila Sikkaathaiyaa
Kaanaangkurivi Rosakkaara Kuruvi
Paththini Ponnu Iva
Paaththaak Kurinji Kitta Vanthaa Nerunji..} (2)
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆலமரப் பொந்துக்குள்ள
வாழவந்த குருவிகளா
காத்திருந்த வேடன் இங்கே
கண்ணி வச்சான் அறிவீகளா
பெண் குருவி சிக்கிடுமா அது
மந்திரத்தில் சொக்கிடுமா…ஹோய்
பெண் குருவி சிக்கிடுமா அது
மந்திரத்தில் சொக்கிடுமா…ஹோய்
ஆண் : கண்ணியில சிக்காதய்யா
கானாங்குருவி ரோஷக்காரக் குருவி
பத்தினிப் பொண்ணு இவ
பாத்தாக் குறிஞ்சி கிட்ட வந்தா நெருஞ்சி
ஆண் : கண்ணியில சிக்காதய்யா
கானாங்குருவி ரோஷக்காரக் குருவி
பத்தினிப் பொண்ணு இவ
பாத்தாக் குறிஞ்சி கிட்ட வந்தா நெருஞ்சி..ஹோய்
ஆண் : அண்டமெங்கும் மழையும் அடிக்க
மண்டபத்தில் எடமுங்குடுக்க
ஒண்ட வந்த திருட்டுச்சாமி
மடத்தப் புடுங்குறான்
ஆண் : சாதி சனம் அருகில் இருக்க
சந்தர்ப்பமும் நெளிஞ்சு கொடுக்க
புத்தி கெட்ட பெரிய மனுஷன்
புடவை திருடுறான்
ஆண் : தாலி கட்டி வச்ச பயதான்
வேலி கட்டி வைக்க மறந்தான்
தந்தனானா தந்தனத் தந்தானா
தந்தனானா தந்தனத் தந்தானா
காமங் கொண்ட ஆம ஒண்ணு
பூந்திருச்சு வீட்டுக்குள்ள
கற்பரசி கண்ணகிக்குத் தங்கை
இந்தச் சின்னப்புள்ள….ஹோய்…
தந்தன….தந்தன….தந்தன….தந்தன….னா….
ஆண் : கண்ணியில சிக்காதய்யா
கானாங்குருவி ரோஷக்காரக் குருவி
பத்தினிப் பொண்ணு இவ
பாத்தாக் குறிஞ்சி கிட்ட வந்தா நெருஞ்சி
ஆண் : கோவணத்தில் இருந்த பொழுதும்
கோபுரத்தில் இருந்த பொழுதும்
அதுக்கொரு மதிப்பு இல்ல
அழுக்கு அழுக்குத்தான்
ஆண் : சீதமகள் அழுத கணக்கு
தேகமெங்கும் நெறைய இருக்கு
இன்னுமது முடியவில்ல
வழக்கு வழக்குத்தான்…
ஆண் : எங்க ஊருப் பொண்ணு அப்போதே
சூரியனக் கட்டி வச்சாளே
எங்க ஊருப் பொண்ணு அப்போதே
சூரியனக் கட்டி வச்சாளே
சுத்தமுள்ள உத்தமி தான்
தீயெடுத்து சுட்டு வச்சா
பத்தினிங்க பாதையில
எங்க பொண்ணு எட்டு வச்சா…..டோயா..
தந்தன….தந்தன….தந்தன….தந்தன….னா….
ஆண் : {கண்ணியில சிக்காதய்யா
கானாங்குருவி ரோஷக்காரக் குருவி
பத்தினிப் பொண்ணு இவ
பாத்தாக் குறிஞ்சி கிட்ட வந்தா நெருஞ்சி} (2)