Album | Kaaviya Thalaivan |
Director | Vasanthabalan |
Producer | S. Sashikanth |
Composer | A R Rahman |
Starring | Siddharth, Prithviraj Sukumaran, Vedhika, Anaika Soti |
Actor | Siddharth |
Singers | Haricharan, Bela Shende |
Lyricist | Vaali |
Release Year | 2014 |
Singers : Haricharan And Bela Shende
Music By : A. R. Rahman
Male : {Vandhanam Vandhanam
Vandhanam Vandhanam
Ellorukkum
Thandhanam Thandhanam} (2)
Male : Kundhanam Kundhanam
Kundhanam Kundhanam
Idam Pidikka
Mundhanum Mundhanum
Male : Yaadhavanaam Andha Madhavanum
Avan Machunanaam Andha Arjunanum
Yaathirai Varugayilae
Theerththa Yaathirai Varugaiyilae
Naadu Kadandhu Kaadu Kadandhu
Madhuraikku Vaaaraaga
Male : Then Madhuraikku Vaaraaga
Angu Nadappadhu Alli Raajiyam
Aththanai Aangalum Sutha Poojiyam
Male : Alliyo Pudhu Rosa
Paarthaar Arjuna Maharaasaa
Alli Malarula Kallu Vazhiyudhu
Arjunan Mugathula Jollu Vazhiyudhu
Aarambam Aagudhu Naadaga Kaadhalu..uu…
Aanukkum Pennum Nadakkura Modhalu..
Male : Alli Varugiraal Alli Varugiraal
Azhagi Aval Perazhagi
Alli Varugiraal Alli Varugiraal
Azhagi Aval Perazhagi
Chorus : Mugathazhagi Aamaa Mugathazhagi
Maruthaani Poosiya Negathazhagi
Kovil Thoon Pola Thodaiyazhagi
Komberi Moookkan Pola Sadaiyazhagi
Male : Ava Nadakkura Nadaya Paarthu
Chorus : Thendral Kaaththu
Adha Paaththu
Udal Verthhu Udal Thorthu
Alli Varugiraalae
Male : Alli Varugiraal Alli Varugiraal
Azhagi Aval Perazhagi
Alli Varugiraal Alli Varugiraal
Azhagi Aval Perazhagi
Female : Piriyasagiyae Piriyasagiyae
Mazhai Naalaa..idhu Mazhai Naalaa
Mayilinam Thogai Virippadhenna
Adhu Mohana Naadagam Nadippadhenna
Mohana Naadagam Nadippadhenna
Female : Piriyasagiyae Piriyasagiyae
Mazhai Naalaa..idhu Mazhai Naalaa
Mayilinam Thogai Virippadhenna
Adhu Mohana Naadagam Nadippadhenna
Female : Nalla Sagunam
Idhu Nalla Sagunam
Oru Naayagam Vara Koodum
Unga Vaai Velukka
Iru Vizhi Sivakka
Kaadhal Noi Thannai Tharakkoodum
Aaa…aaaa…aaa….
Female : Yaaradi Avan Yaaradi
Veeraadhi Veeranoo Kooradi
Sooraadhi Soorano Kooradi
Indha Alliyayai ..jaadhi Malliyai
Inba Valliyayai… Uyir Kolliyayai
Vella Thagunthavanoo
Ezhu Vannam Migundhavanoo
Yaaradi … Yaaradi
Male : Avaiyilirukkum Aththanai Perukkum
Vanakkam Vanakkam Vanakkam
En Vanakkathilae Than
Thamizh Manakkum
Male : Panja Paandavar Anju Pergalilae
Naduvinil Naan Pirandhen
Arjunan Enbadhu En Peyaru
Aththinapuri Thaan En Ooru
Male : Kannaa Kannaa
Yen Azhaithaai
Ennai Yen Azhaithai
Arjunanae En Aaruyir Thozha..
Male : Madhuraiyayai Aalgira Alli
En Manadhai Eduthaalae Kalli
En Ullathathai Ottiya Palli
Avala Odukkanum Padukkayil Thulli
Male : Indha Samyathil
Nee Udhavanum Kannaa
Engala Serthu Nee Vaikanum Onnaa
Male : Naan Bamaavukkuthaanda Maama
Adha Nee Marakathae Aamaa
Male : Unnai Vittal Ennakku Yaaru
Udhavi Seivaar Kooru
Male : Naan Maargangal Solven Kelu
Mana Maalaiyai Thaangum Un Tholu
Female : Naan Annathooviyil Ayandhirukka
En Manikazhuthil Thaali
Kattalamaa Kattalamaa
Male : {En Mela Kuththam Illa
Unna Kanda Muthala
En Nenju Suthamilla} (2)
Female : Nee Potathu Ethanai Vedamadaa
Kundhi Puthiranaai Vandhu Moodumada
Veeran Endraal Nee Villedu
Indha Poovaiyin Melae Porthodu
Male : Aaaaa….aaaa…aaa..aaaa…
Aaaa…aaaa…
Nenju Porukkuthillaiyae
Nenju Porukkuthillaiyae
Male : Naam Thaayaal Pirandhom
Chorus : Pirandhom
Male : Thamizhaal Valarndhoam
Chorus : Valarndhom
Male : Thayum Tamizhum Pendhanae
Irandum Irandu Kandhaanae
Chorus : Thayum Tamizhum Pendhanae
Irandum Irandu Kandhaanae
Male : Parangiyarku
Bharatha Thaaithaan Adimaiyaavadha
Aval Kaivilangalum Kaal Vilangaalum
Naalum Novadhaa..
Male : Viduthalai Velviyil Koduthalai
Vellaiyan Seivano Suduthalai
Makkalukku Illai Soodu
Ithu Maaperum Maanakkedu
Chorus : Engae Pogum Naadu
Ithu Yaam Irukkum Thaai Veedu
Male : Nenju Porukkuthillaiyae
Nenju Porukku…thillaiyae..
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் பேலா ஷிண்டே
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
ஆண் : {வந்தனம் வந்தனம்
வந்தனம் வந்தனம்
எல்லோருக்கும் தந்தனம் தந்தனம்} (2)
ஆண் : குந்தனும் குந்தனும்
குந்தனும் குந்தனும்
இடம் பிடிக்க முந்தணும் முந்தணும்
ஆண் : யாதவனாம் அந்த மாதவனும்
அவன் மச்சுனனாம் அந்த அர்ஜுனனும்
யாத்திரை வருகையிலே
தீர்த்த யாத்திரை வருகையிலே
நாடு கடந்து காடு கடந்து
மதுரைக்கு வாராக
ஆண் : தென் மதுரைக்கு வாராக
அங்கு நடப்பது அல்லி ராஜ்ஜியம்
அத்தனை ஆண்களும் சுத்த பூஜ்ஜியம்
ஆண் : அல்லியோ புது ரோசா
பார்த்தார் அர்ஜுன மகராசா
அல்லி மலருல கள்ளு வழியுது
அர்ஜுனன் முகத்துல ஜொள்ளு வழியுது
ஆரம்பமாகுது நாடக காதலு
ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்குற மோதலு
ஆண் : அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள்
அழகி அவள் பேரழகி
அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள்
அழகி அவள் பேரழகி
குழு : முகத்தழகி ஆமா முகத்தழகி
மருதாணி பூசிய நகத்தழகி
கோவில் தூண் போல தொடையழகி
கொம்பேறி மூக்கன் போல சடையழகி
ஆண் : அவ நடக்குற நடைய பாத்து
குழு : தென்றல் காத்து ..அத பாத்து
உடல் வேர்த்து உடல் தோர்த்து
அல்லி வருகிறாளே
ஆண் : அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள்
அழகி அவள் பேரழகி
அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள்
அழகி அவள் பேரழகி
பெண் : பிரியசகியே பிரியசகியே
மழைநாளா இது மழைநாளா
மயிலினம் தோகை விரிப்பதென்ன
அது மோகன நாடகம் நடிப்பதென்ன
மோகன நாடகம் நடிப்பதென்ன
பெண் : பிரியசகியே பிரியசகியே
மழைநாளா இது மழைநாளா
மயிலினம் தோகை விரிப்பதென்ன
அது மோகன நாடகம் நடிப்பதென்ன
பெண் : நல்ல சகுனம்
இது நல்ல சகுனம்
ஒரு நாயகன் வரக்கூடும்
உங்க வாய் வெளுக்க
இரு விழி சிவக்க
காதல் நோய் தனை தரக்கூடும்
ஆஆ….ஆஆஆ…..ஆஆஆ…..
பெண் : யாரடி அவன் யாரடி
வீராதி வீரனோ கூறடி
சூராதி சூரனோ கூறடி
இந்த அல்லியை.. ஜாதி மல்லியை
இன்பவல்லியை… உயிர்கொல்லியை
வெல்லத் தகுந்தவனோ
ஏழு வண்ணம் மிகுந்தவனோ
யாரடி… யாரடி
ஆண் : அவையிளிருக்கும்
அத்தனை பேருக்கும்
வணக்கம் வணக்கம் வணக்கம்
என் வணக்கத்திலே தான்
தமிழ் மணக்கும்
ஆண் : பஞ்ச பாண்டவர் அஞ்சு பேர்களிலே
நடுவினில் நான் பிறந்தேன்
அர்ஜுனன் என்பது என் பேரு
இரத்தினபுரி தான் என் ஊரு
ஆண் : கண்ணா கண்ணா
ஏன் அழைத்தாய்
என்னை ஏன் அழைத்தாய்
அர்ஜுனனே என் ஆருயிர் தோழா..
ஆண் : மதுரையை ஆள்கிற அல்லி
என் மனதை எடுத்தாலே கள்ளி
என் உள்ளத்தை ஒட்டிய பல்லி
அவளை ஒடுக்கனும் படுக்கையில் துள்ளி
ஆண் : இந்த சமையத்தில்
நீ உதவனும் கண்ணா
எங்கள சேத்து நீ வைக்கணும் ஒண்ணா
ஆண் : நான் பாமாவுக்குத்தாண்டா மாமா
அதை நீ மறக்காதே ஆமா
ஆண் : உன்னை விட்டால் எனக்கு யாரு
உதவி செய்வார் கூறு
ஆண் : நான் மார்க்கங்கள் சொல்வேன் கேளு
மணமாலையை தாங்கும் உன் தோளு
பெண் : நான் அன்னதூவியில் அயந்திருக்க
என் மணிக்கழுத்தில் தாலி
கட்டலாமா கட்டலாமா
ஆண் : {என் மேல குத்தமில்ல
உன்ன கண்ட முதலா
என் நெஞ்சு சுத்தமல்ல} (2)
பெண் : நீ போட்டது எத்தனை வேடமடா
குந்தி புத்திரனாய் வந்த மூடமடா
வீரன் என்றால் நீ வில்லெடு
இந்த பூவையின் மேலே போர் தொடு
ஆண் : ஆ… ஆ…ஆஆ…ஆஆ….
நெஞ்சு பொறுக்குதில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே
ஆண் : நாம் தாயால் பிறந்தோம்
குழு : பிறந்தோம்
ஆண் : தமிழால் வளர்ந்தோம்
குழு : வளர்ந்தோம்
ஆண் : தாயும் தமிழும் பெண்தானே
இரண்டும் இரண்டு கண்தானே
குழு : தாயும் தமிழும் பெண்தானே
இரண்டும் இரண்டு கண்தானே
ஆண் : பரங்கியர்க்கு
பாரத தாய் தான் அடிமையாவதா
அவள் கைவிலங்காலும் கால் விலங்காலும்
நாளும் நோவதா
ஆண் : விடுதலை வேள்வியில் கொடுதலை
வெள்ளையன் செய்வானோ சுடுதலை
மக்களுக்கில்லை சூடு
இது மாபெரும் மானக்கேடு
குழு : எங்கே போகும் நாடு
இது நாமிருக்கும் தாய் வீடு
நெஞ்சு பொறுக்குதில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே….