Album | Kuzhandaiyum Deivamum |
Director | Krishnan Panju |
Producer | A. V. Meiyappan |
Composer | M S Viswanathan |
Starring | Jaishankar, Jamuna |
Actor | Jaishankar |
Singers | P Susheela, T M Soundararajan |
Lyricist | Vaali |
Release Year | 1965 |
Singers : P. Susheela And T. M. Soundararajan
Music By : M. S. Vishwanathan
Male : Anbulla Maan Vizhiyae
Aasaiyil Orr Kadidham
Naan Ezhudhuvadhenna Vendraal
Uyir Kaadhalil Orr Kavidhai
Female : Anbulla Mannavanae
Aasaiyil Orr Kadidham
Adhai Kaigalil Ezhudhavillai
Iru Kangalil Ezhudhi Vandhen
Male : {Nalam Nalam Dhaanaa
Mullai Malarae
Sugam Sugam Dhaana
Muththu Sudarae} (2)
Male : Ilaiya Kanniyin Idai Melindhadho
Edutha Edupilae Nadai Thalarndhadho
Male : Vanna Poongkodi Vadivam Kondadho
Vaadai Kaatrilae Vaadi Nindradho
Male : Anbulla Maan Vizhiyae
Aasaiyil Orr Kadidham
Naan Ezhudhuvadhenna Vendraal
Uyir Kaadhalil Orr Kavidhai
Female : {Nalam Nalam Thaanae
Nee Irundhaal
Sugam Sugam Thaanae
Ninaivirundhaal} (2)
Female : Idai Melindhadhu Iyarkai Allavaa
Nadai Thalarndhadhu Naanam Allavaa
Female : Vanna Poongkodi Penmai Allavaa
Vaada Vaiththadhum Unmai Allavaa
Female : Anbulla Mannavanae
Aasaiyil Orr Kadidham
Adhai Kaigalil Ezhudhavillai
Iru Kangalil Ezhudhi Vandhen
Male : Anbulla Maan Vizhiyae
Aasaiyil Orr Kadidham
Naan Ezhudhuvadhenna Vendraal
Uyir Kaadhalil Orr Kavidhai
Female : Unnaku Oru Paadam Solla Vandhen
Ennaku Oru Paadam Kettu Konden
Male : Paruvam Enbadhae Paadam Allavaa
Paavai Enbadhae Palli Allavaa
Male & Female : Oruvar Sollavum
Oruvar Ketkavum
Iravum Vanthathu Nilavum Vanthathu
Male : Anbulla Maan Vizhiyae
Female : Aasaiyil Orr Kadidham
Male : Adhai Kaigalil Ezhudhavillai
Female : Iru Kangalil Ezhudhi Vandhen
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர்க் காதலில் ஓர் கவிதை
பெண் : அன்புள்ள
மன்னவனே ஆசையில்
ஓர் கடிதம் அதைக் கைகளில்
எழுதவில்லை இரு கண்களில்
எழுதி வந்தேன்
ஆண் : { நலம் நலம்தானா
முல்லை மலரே சுகம்
சுகம்தானா முத்து சுடரே } (2)
ஆண் : இளைய கன்னியின்
இடை மெலிந்ததோ எடுத்த
எடுப்பிலே நடை தளர்ந்ததோ
ஆண் : வண்ணப் பூங்கொடி
வடிவம் கொண்டதோ வாடைக்
காற்றிலே வாடி நின்றதோ
ஆண் : அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர்க் காதலில் ஓர் கவிதை
பெண் : { நலம் நலம்தானே
நீ இருந்தால் சுகம் சுகம்
தானே நினைவிருந்தால் } (2)
பெண் : இடை மெலிந்தது
இயற்கையல்லவா நடை
தளர்ந்தது நாணம் அல்லவா
பெண் : வண்ணப் பூங்கொடி
பெண்மை அல்லவா வாட
வைத்ததும் உண்மை அல்லவா
பெண் : அன்புள்ள
மன்னவனே ஆசையில்
ஓர் கடிதம் அதைக் கைகளில்
எழுதவில்லை இரு கண்களில்
எழுதி வந்தேன்
ஆண் : அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர்க் காதலில் ஓர் கவிதை
பெண் : உனக்கு ஒரு பாடம்
சொல்ல வந்தேன் எனக்கு
ஒரு பாடம் கேட்டு கொண்டேன்
ஆண் : பருவம் என்பதே
பாடம் அல்லவா பாவை
என்பதே பள்ளி அல்லவா
ஆண் & பெண் : ஒருவர்
சொல்லவும் ஒருவர்
கேட்கவும் இரவும் வந்தது
நிலவும் வந்தது
ஆண் : அன்புள்ள மான்விழியே
பெண் : ஆசையில் ஓர் கடிதம்
ஆண் : அதை கைகளில் எழுதவில்லை
பெண் : இரு கண்களில் எழுதி வந்தேன்