Album | Vaaname Ellai |
Director | K. Balachander |
Producer | Pushpa Kandaswamy |
Composer | Maragadha Mani |
Starring | Anand Babu, Bhanupriya, Ramya Krishnan, Madhoo, Rajesh, Babloo Prithviraj |
Actor | Anand Babu |
Singers | S P Balasubrahmanyam, K S Chithra |
Lyricist | Vairamuthu |
Release Year | 1992 |
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra
Music By : Maragadha Mani
Chorus : Im..imum..im..imum..
Im..imum..im..imum..
Male : Nee Andavana
Thaai Thandhai Thaan Unakillaiyae
Kanna Naan Un Jaadhi Thaan
Uravenbadhae Enakillaiyae
Kanneer Enna Kanna
Ada Naan Un Maamanae
Mannil Vandhadhaalae
Nee Mannin Maindhanae
Male : Thai Bhaashai Ariyaadha
Pudhu Indhiyan
Nee Endral Poiyillaiyae
Than Jaadhi Sollaamal Nee Vaazhgiraai
Un Polae Oorillaiyae
Female : Im..imum..
Male : Idhazhoram Aayiram
Siru Pookal Pookiraai
Oru Kannaal Paarkiraai
Odhukeedu Ketkiraai
Thaalatida Mozhiyundu Valarvaai Piraiye
Female : Im..imum..
Male : Palootida Vazhi Illai
Adhudhaan Kuraiyae
Undhan Sogam Sonnaal
Yekkam Poividum
Engal Sogam Sonnaal
Un Thookam Poividu
Female : Nee Andavana
Thaai Thandhai Thaan Unakillaiyae
Kanna Naan Un Jaadhi Thaan
Uravenbadhae Enakillaiyae
Male : Kanneer Enna Kanna
Ada Naan Un Maamanae
Female : Mannil Vandhadhaalae
Nee Mannin Maindhanae
Female : Aaro Aaro Aaro Araaraaro
Female : Aaro Aaro Aaro Areeraaro
Female : Kalaigindra Megangal
Sabhai Koodiyae
Vaan Veliyai Thaalatudhae
Female : Karaigindra Pirai Aindhu
Kai Veesiyae
Sooriyanai Thaalatudhe
Male : Ah..aha..ah..
Female : Mudiyaadha Yaathirai
Mudigidra Velaiyil
Muthangal Thandhu Nee
Mullanai Selaiyil
Female : Nee Enbadhu
Em Vaazhvil Varava Selavaa
Mul Enbadho Rojavil
Urava Pagaya
Female : Kaalam Seidha Kolam
Nee Ingae Vandhadhu
Kanneerodu Vandhu
Kanneer Serndhadhu
Female : Nee Andavana
Thaai Thandhai Thaan Unakillaiyae
Female : Kanna Naan Un Jaadhi Thaan
Uravenbadhae Enakillaiyae
Male : Kanneer Enna Kanna
Ada Naan Un Maamanae
All : Mannil Vandhadhaalae
Nee Mannin Maindhanae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : மரகதமணி
குழு : ம்ம்…ம்ஹும்….ம்ம்…ம்ஹும்….
ம்ம்…ம்ஹும்….ம்ம்…ம்ஹும்….
ஆண் : நீ ஆண்டவனா
தாய் தந்தைதான் உனக்கில்லையே
கண்ணா நான் உன் ஜாதிதான்
உறவென்பதே எனக்கில்லையே
கண்ணீர் என்ன கண்ணா
அட நான் உன் மாமனே
மண்ணில் வந்ததாலே
நீ மண்ணின் மைந்தனே
ஆண் : தாய் பாஷை அறியாத
புது இந்தியன்
நீ என்றால் பொய்யில்லையே
தன் ஜாதி சொல்லாமல் நீ வாழ்கிறாய்
உன் போலே ஊரில்லையே
பெண் : ம்ம்…ம்ஹும்….
ஆண் : இதழோரம் ஆயிரம்
சிறு பூக்கள் பூக்கிறாய்
ஒரு கண்ணால் பார்க்கிறாய்
ஒதுக்கீடு கேட்கிறாய்
தாலாட்டிட மொழியுண்டு வளர்வாய் பிறையே
பெண் : ம்ம்…ம்ஹும்….
ஆண் : பாலூட்டிட வழி இல்லை
அதுதான் குறையே
உந்தன் சோகம் சொன்னால்
ஏக்கம் போய்விடும்
எங்கள் சோகம் சொன்னால்
உன் தூக்கம் போய்விடும்
பெண் : நீ ஆண்டவனா
தாய் தந்தைதான் உனக்கில்லையே
கண்ணா நான் உன் ஜாதிதான்
உறவென்பதே எனக்கில்லையே
ஆண் : கண்ணீர் என்ன கண்ணா
அட நான் உன் மாமனே
பெண் : மண்ணில் வந்ததாலே
நீ மண்ணின் மைந்தனே
பெண் : ஆரோ ஆரோ ஆரோ ஆராராரோ
ஆரோ ஆரோ ஆரோ ஆரீராரோ
பெண் : கலைகின்ற மேகங்கள்
சபை கூடியே
வான் வெளியை தாலாட்டுதே
பெண் : கரைகின்ற பிறை ஐந்து
கை வீசியே
சூரியனை தாலாட்டுதே
ஆண் : ஆ….அஹ….ஆ….
பெண் : முடியாத யாத்திரை
முடிகின்ற வேளையில்
முத்தங்கள் தந்து நீ
முள் ஆனாய் சேலையில்
பெண் : நீ என்பது
எம் வாழ்வில் வரவா செலவா
முள் என்பது ரோஜாவில்
உறவா பகையா
பெண் : காலம் செய்த கோலம்
நீ இங்கே வந்தது
கண்ணீரோடு வந்து
கண்ணீர் சேர்ந்தது
பெண் : நீ ஆண்டவனா
தாய் தந்தைதான் உனக்கில்லையே
பெண் : கண்ணா நான் உன் ஜாதிதான்
உறவென்பதே எனக்கில்லையே
ஆண் : கண்ணீர் என்ன கண்ணா
அட நான் உன் மாமனே
அனைவரும் : மண்ணில் வந்ததாலே
நீ மண்ணின் மைந்தனே