Album | Kaviraja Kalamegam |
Director | G.R Nathan |
Producer | R Kalyanaraman |
Composer | T M Soundararajan |
Starring | T. M. Soundararajan, Vennira Aadai Moorthy |
Singers | P Susheela |
Lyricist | Kannadasan |
Release Year | 1978 |
Singer : P. Susheela
Music by : S. M. Subbaih Naidu
Lyrics by : Kannadasan
Female : ………………
Female : Yaaraaga irunthaal enna
Yaaraaga irunthaal enna
Idhil arasanenna illai aandiyenna
Aiyyaa yaaraaga irunthaal enna
Yaaraaga irunthaal enna
Female : Paramporul samasthaanam kondaadum pantham
Aa…aa…aaa….aa….aa…..
Paarpathum ketpathum ellorkkum sontham
Paarpathum ketpathum ellorkkum sontham
Manathilethu ninaivilaethu pirivinai
Iraivan veedu tharuvathaagum uravinai
Female : Ninaikka ninaikka inikkum sugangal
Peruvathenna urimaiyudan ketpavargal
Female : Yaaraaga irunthaal enna….
Female : Sivanukku umaiyenna aththai magalaa
Sivanukku umaiyenna aththai magalaa
Avan maganukku deivaanai maman magalaam
Avan maganukku deivaanai maman magalaam
Iraivanin veettinilor jaathiyillai
Iraivanin veettinilor jaathiyillai
Adhai ennidam ketka oru needhiyillaiyae
Female : Vaigai aattrin karaiyil vaazhum sokkanum
Malaiyarajan nangaiyaana selviyum
Inainthu mudiththu anainthu suvaiththa
Inimaiyathu kanavumilai kadhaiyumillai
Female : Yaaraaga irunthaal enna….
Female : Kannukkor thadai kaalukkor thadai
Pengalukke iduveer
Male : ………….
Female : Ponnukko illai pugazhukko
Sugam vanthathillai ariveer
Male : ………….
Female : Vinnukko illai mannukko
Idhu pudhumaiyillai periyeer
Male : ……………..
Male : Vedikkai illai vegam udane
Konjam vazhi viduveer
Male : …………………
Female : Yaaraaga irunthaal enna
Idhil arasanenna illai aandiyenna
Aiyyaa yaaraaga irunthaal enna
Yaaraaga irunthaal enna
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : …………………
பெண் : யாராக இருந்தால் என்ன
யாராக இருந்தால் என்ன
இதில் அரசனென்ன இல்லை ஆண்டியென்ன
ஐயா யாராக இருந்தால் என்ன
யாராக இருந்தால் என்ன
பெண் : பரம்பொருள் சமஸ்தானம் கொண்டாடும் பந்தம்
ஆ…ஆ….ஆஅ…ஆ….ஆ…..
பார்ப்பதும் கேட்பதும் எல்லோர்க்கும் சொந்தம்
பார்ப்பதும் கேட்பதும் எல்லோர்க்கும் சொந்தம்
மனதிலேது நினைவிலேது பிரிவினை
இறைவன் வீடு தருவதாகும் உறவினை
பெண் : நினைக்க நினைக்க இனிக்கும் சுகங்கள்
பெறுவதென்ன உரிமையுடன் கேட்பவர்கள்
பெண் : யாராக இருந்தால் என்ன……
பெண் : சிவனுக்கு உமையென்ன அத்தை மகளா
சிவனுக்கு உமையென்ன அத்தை மகளா
அவன் மகனுக்கு தெய்வானை மாமன் மகளாம்
அவன் மகனுக்கு தெய்வானை மாமன் மகளாம்
இறைவனின் வீட்டினிலோர் ஜாதியில்லையே
இறைவனின் வீட்டினிலோர் ஜாதியில்லையே
அதை என்னிடம் கேட்க ஒரு நீதியில்லையே
பெண் : வைகை ஆற்றின் கரையில் வாழும் சொக்கனும்
மலையராஜன் நங்கையான செல்வியும்
இணைந்து முடித்து அணைந்து சுவைத்த
இனிமையது கனவுமில்லை கதையுமில்லை
பெண் : யாராக இருந்தால் என்ன……
பெண் : கண்ணுக்கோர் தடை காலுக்கோர் தடை
பெண்களுக்கே இடுவீர்
ஆண் : ………………..
பெண் : பொன்னுக்கோ இல்லை புகழுக்கோ
சுகம் வந்ததில்லை அறிவீர்
ஆண் : ………………….
பெண் : விண்ணுக்கோ இல்லை மண்ணுக்கோ
இது புதுமையில்லை பெரியீர்
ஆண் : ……………………….
ஆண் : வேடிக்கை இல்லை வேகம் உடனே
கொஞ்சம் வழி விடுவீர்…..
ஆண் : ………………….
பெண் : யாராக இருந்தால் என்ன
இதில் அரசனென்ன இல்லை ஆண்டியென்ன
ஐயா யாராக இருந்தால் என்ன
யாராக இருந்தால் என்ன