Album | Adimaippenn |
Director | K. Shankar |
Producer | M. G. Ramachandran,R. M. Veerappan |
Composer | K V Mahadevan |
Starring | M. G. Ramachandran, Jayalalithaa |
Actor | M. G. Ramachandran |
Singers | Jayalalithaa |
Lyricist | Vaali |
Release Year | 1969 |
Singer : Jayalalithaa
Music By : K. V. Mahadevan
Female : { Amma Endral Anbu
Appa Endral Arivu
Aasaan Endral Kalvi
Avarae Ulagil Deivam } (2)
Female : { Annaiyai Pillai
Pillaiyai Annai Amma
Endrae Azhaipadhundu } (2)
Female : { Anbin Vilakam
Panbin Muzhakam
Amma Endroru Sollil Undu } (2)
Female : { Pathu Thingal
Madi Sumapaal Pillai
Petradhum Thunbathai Marapaal } (2)
Female : Pathiyam Irundhu
Kaapaal Than Rathathai
Paalaaki Kodupaal
Female : Amma Endral Anbu
Appa Endral Arivu
Aasaan Endral Kalvi
Avarae Ulagil Deivam
Female : { Iyarkai Kodukum
Selvathai Ellam Podhuvaai
Vaithida Vendum } (2)
Female : { Illaathavarkum
Irupavar Thamakum
Pagirndhae Koduthida Vendum} (2)
Female : { Oruvarukaaga Mazhaiyillai
Oruvarukaaga Nilavillai } (2)
Varuvadhellam Anaivarukum
Vagudhae Vaithaal Vazhakillai
Female : Amma Endral Anbu
Appa Endral Arivu
Aasaan Endral Kalvi
Avarae Ulagil Deivam
Female : { Mozhiyum Naadum
Mugathuku Irandu Vizhigal
Aagum Yendru } (2)
Female : { Unarum Podhu
Unakum Yenakum
Nanmai Yendrum Undu } (2)
Female : { Vaazhum Uyiril
Uyarvum Thaazhvum
Vaguthu Vaipadhu Paavam } (2)
Female : Karunai Konda
Manidharellam Kadavul
Vadivam Aagum
Female : Amma Endral Anbu
Appa Endral Arivu
Aasaan Endral Kalvi
Avarae Ulagil Deivam
பாடகி : ஜெயலலிதா
இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்
பெண் : { அம்மா என்றால்
அன்பு அப்பா என்றால்
அறிவு ஆசான் என்றால்
கல்வி அவரே உலகில்
தெய்வம் } (2)
பெண் : { அன்னையை
பிள்ளை பிள்ளையை
அன்னை அம்மா என்றே
அழைப்பதுண்டு } (2)
பெண் : { அன்பின் விளக்கம்
பண்பின் முழக்கம்
அம்மா என்றொரு
சொல்லில் உண்டு } (2)
பெண் : { பத்து திங்கள்
மடி சுமப்பாள் பிள்ளை
பெற்றதும் துன்பத்தை
மறப்பாள் } (2)
பெண் : பத்தியமிருந்து
காப்பாள் தன் ரத்தத்தை
பாலாக்கி கொடுப்பாள்
பெண் : அம்மா என்றால்
அன்பு அப்பா என்றால்
அறிவு ஆசான் என்றால்
கல்வி அவரே உலகில்
தெய்வம்
பெண் : { இயற்கை
கொடுக்கும் செல்வத்தை
எல்லாம் பொதுவாய்
வைத்திட வேண்டும் } (2)
பெண் : { இல்லாதவர்க்கும்
இருப்பவர் தமக்கும்
பகிர்ந்தே கொடுத்திட
வேண்டும் } (2)
பெண் : { ஒருவருக்காக
மழை இல்லை ஒருவருக்காக
நிலவில்லை } (2)
வருவதெல்லாம் அனைவருக்கும்
வகுத்தே வைத்தால்
வழக்கில்லை
பெண் : அம்மா என்றால்
அன்பு அப்பா என்றால்
அறிவு ஆசான் என்றால்
கல்வி அவரே உலகில்
தெய்வம்
பெண் : { மொழியும்
நாடும் முகத்துக்கு
இரண்டு விழிகள்
ஆகும் என்று } (2)
பெண் : { உணரும்போது
உனக்கும் எனக்கும்
நன்மை என்றும் உண்டு } (2)
பெண் : { வாழும் உயிரில்
உயர்வும் தாழ்வும்
வகுத்து வைப்பது பாவம் } (2)
பெண் : கருணை
கொண்ட மனிதரெல்லாம்
கடவுள் வடிவம் ஆகும்
பெண் : அம்மா என்றால்
அன்பு அப்பா என்றால்
அறிவு ஆசான் என்றால்
கல்வி அவரே உலகில்
தெய்வம்