Album | Uthaman |
Director | V. B. Rajendra Prasad |
Producer | Jagapathy Art Pictures |
Composer | K V Mahadevan |
Starring | Sivaji Ganesan, Manjula |
Actor | Sivaji Ganesan |
Singers | T M Soundararajan |
Lyricist | Kannadasan |
Release Year | 1976 |
Singer : T. M. Soundararajan
Music By : K. V. Mahadevan
Male : Kanavugalae Kanavugalae
Kaalamellaam Vaareero
Ninaivugalae Ninaivugalae
Nindru Poga Maatteero
Nimmadhiyai Thaareero
Male : Kanavugalae Kanavugalae
Kaalamellaam Vaareero
Ninaivugalae Ninaivugalae
Nindru Poga Maatteero
Nimmadhiyai Thaareero
Male : Kanavugalae Kanavugalae
Kaalamellaam Vaareero
Chorus : Hoo Oo Oo Oo Oo Oo Ooo..(4)
Male : {Kaviyuraitha Karpanai Pol
Kai Piditha Poongodiyaal
Poiyuraitha Kavidhaiyai Pol
Pona Kadhai Enna Solven} (2)
Male : Silai Vadikka Kalleduthen
Sittruliyaal Sedhukki Vaithen
Silai Vadithu Mudiyum Munnae
Thalai Vedithu Ponadhammaa
Male : Kanavugalae Kanavugalae
Kaalamellaam Vaareero
Ninaivugalae Ninaivugalae
Nindru Poga Maatteero
Nimmadhiyai Thaareero
Male : {Aadiyilae Kaattradithaal
Aayiramaai Ilaiyudhirum
Aippasiyil Mazhai Pozhindhaal
Athanaiyum Thazhaithu Varum} (2)
Male : Aval Aadi Vara Paarthirundhen
Aadi Vandhu Serndhadhammaa
Aippasikku Kaathirundhen
Eppasiyum Theeravillai
Male : Kanavugalae Kanavugalae
Kaalamellaam Vaareero
Chorus : Hoo Oo Oo Oo Oo Oo Ooo..(4)
Male : {Kaayamondru Nee Koduthaai
Kaaindha Vadu Neengavillai
Kaaindha Vadu Aarudharkko
Kai Thavazhum Saei Koduthaai} (2)
Male : Un Kadhaiyai Naan Ezhudha
Uyirai Vaithu Kaathirundhen
En Kadhaiyai Nee Ezhudhi
Yaedugalai Maraithu Vittaai
Male : Kanavugalae Kanavugalae
Kaalamellaam Vaareero
Ninaivugalae Ninaivugalae
Nindru Poga Maatteero
Nimmadhiyai Thaareero
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : கனவுகளே கனவுகளே
காலமெல்லாம் வாரீரோ
நினைவுகளே நினைவுகளே
நின்று போக மாட்டீரோ
நிம்மதியை தாரீரோ
ஆண் : கனவுகளே கனவுகளே
காலமெல்லாம் வாரீரோ
நினைவுகளே நினைவுகளே
நின்று போக மாட்டீரோ
நிம்மதியை தாரீரோ
ஆண் : கனவுகளே கனவுகளே
காலமெல்லாம் வாரீரோ
குழு : ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ….(4)
ஆண் : {கவியுரைத்த கற்பனைபோல்
கைப்பிடித்த பூங்கொடியாள்
பொய்யுரைத்த கவிதையை போல்
போன கதை என்ன சொல்வேன்} (2)
ஆண் : சிலை வடிக்க கல்லெடுத்தேன்
சிற்றுளியால் செதுக்கி வைத்தேன்
சிலை வடித்து முடியும் முன்னே
தலை வெடித்து போனதம்மா
ஆண் : கனவுகளே கனவுகளே
காலமெல்லாம் வாரீரோ
நினைவுகளே நினைவுகளே
நின்று போக மாட்டீரோ
நிம்மதியை தாரீரோ
ஆண் : {ஆடியிலே காற்றடித்தால்
ஆயிரமாய் இலை உதிரும்
ஐப்பசியில் மழை பொழிந்தால்
அத்தனையும் தழைத்து வரும்} (2)
ஆண் : அவள் ஆடிவரப் பார்த்திருந்தேன்
ஆடி வந்து சேர்ந்ததம்மா
ஐப்பசிக்கும் காத்திருந்தேன்
எப்பசியும் தீரவில்லை
ஆண் : கனவுகளே கனவுகளே
காலமெல்லாம் வாரீரோ
குழு : ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ….(4)
ஆண் : {காயமொன்று நீ கொடுத்தாய்
காய்ந்த வடு நீங்கவில்லை
காய்ந்த வடு ஆறுதற்கோ
கைதவழும் சேய் கொடுத்தாய்} (2)
ஆண் : உன் கதையை நான் எழுத
உயிரை வைத்து காத்திருந்தேன்
என் கதையை நீ எழுதி
ஏடுகளை மறைத்து விட்டாய்
ஆண் : கனவுகளே கனவுகளே
காலமெல்லாம் வாரீரோ
நினைவுகளே நினைவுகளே
நின்று போக மாட்டீரோ
நிம்மதியை தாரீரோ