Album | Thaali Bhagyam |
Director | K. B. Nagabhushanam |
Producer | K. B. Nagabhushanam |
Composer | K V Mahadevan |
Starring | M. G. Ramachandran, B. Saroja Devi, M. N. Nambiar |
Actor | MGR |
Singers | T M Soundararajan, P Susheela |
Lyricist | Vaali |
Release Year | 1966 |
Singers : T. M. Soundararajan And P. Susheela
Music By : K. V. Mahadevan
Female : Kan Pattadhu Konjam
Pun Pattadhu Nenjam
Male : Kai Thottadhu Unnai
Kulir Vittadhu Ennai
Female : Kan Pattadhu Konjam
Pun Pattadhu Nenjam
Male : Kai Thottadhu Unnai
Kulir Vittadhu Ennai
Female : {Andhi Pozhudhu Poga
Pozhudhu Poga
Aasai Vandhadhu
Adhu Mudhal Mudhalai Thodangumbodhu
Mayakkkam Vandhadhu} (2)
Male : Vizhi Malara Malara Paartha Paarvai
Manadhil Vizhundhadhu
Vizhi Malara Malara Paartha Paarvai
Manadhil Vizhundhadhu
Udal Kulunga Kulunga Siritha Azhagu
Madiyil Vizhundhadhu
Udal Kulunga Kulunga Siritha Azhagu
Madiyil Vizhundhadhu
Female : Kan Pattadhu Konjam
Pun Pattadhu Nenjam
Male : Kai Thottadhu Unnai
Kulir Vittadhu Ennai
Male : {Indha Perazhagu Pon Mugathai
Naanam Maraippadho
Illai Paruva Pennai Paartha Kannai
Aasai Maraippadho} (2)
Female : {Udal Maraithirukka Paartha Podhu
Ullam Theriyumaa
Andha Ullam Pongum Vellathilae
Uravu Puriyumaa} (2)
Male : Kan Pattadhu Konjam
Pun Pattadhu Nenjam
Female : Kai Thottadhu Unnai
Kulir Vittadhu Ennai
Female : {Nalla Kodai Kaala Naerathilum
Kulireduppadhen
Udal Kuliredukkum Kaalathilum
Kodhithiruppadhen} (2)
Male : Indha Kovai Idhazh Veluthirukkum
Kaaranam Enna
Indha Kovai Idhazh Velutthirukkum
Kaaranam Enna
Un Paalvizhighal Sivandhirukkum
Kaariyam Enna
Un Paalvizhighal Sivandhirukkum
Kaariyam Enna
Female : Kan Pattadhu Konjam
Male : Pun Pattadhu Nenjam
Female : Kai Thottadhu Unnai
Male : Kulir Vittadhu Ennai
Both : Kan Pattadhu Konjam
Pun Pattadhu Nenjam
Kai Thottadhu Unnai
Kulir Vittadhu Ennai
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : கண் பட்டது கொஞ்சம்
புண்பட்டது நெஞ்சம்
ஆண் : கைத் தொட்டது உன்னை
குளிர் விட்டது என்னை
பெண் : கண் பட்டது கொஞ்சம்
புண்பட்டது நெஞ்சம்
ஆண் : கைத் தொட்டது உன்னை
குளிர் விட்டது என்னை
பெண் : {அந்திப் பொழுது போக
பொழுது போக
ஆசை வந்தது அது
முதல் முதலாய் தொடங்கும்போது
மயக்கம் வந்தது} (2)
ஆண் : விழி மலர மலர பார்த்த பார்வை
மனதில் விழுந்தது
விழி மலர மலர பார்த்த பார்வை
மனதில் விழுந்தது
உடல் குலுங்கக் குலுங்க சிரித்த அழகு
மடியில் விழுந்தது
உடல் குலுங்கக் குலுங்க சிரித்த அழகு
மடியில் விழுந்தது
பெண் : கண் பட்டது கொஞ்சம்
புண்பட்டது நெஞ்சம்
ஆண் : கைத் தொட்டது உன்னை
குளிர் விட்டது என்னை
ஆண் : {இந்தப் பேரழகு பொன் முகத்தை
நாணம் மறைப்பதோ
இல்லை பருவப் பெண்ணைப் பார்த்த கண்ணை
ஆசை மறைப்பதோ} (2)
பெண் : {உடல் மறைத்திருக்கப் பார்த்தபோது
உள்ளம் தெரியுமா
அந்த உள்ளம் பொங்கும் வெள்ளத்திலே
உறவு புரியுமா} (2)
ஆண் : கண் பட்டது கொஞ்சம்
புண்பட்டது நெஞ்சம்
பெண் : கைத் தொட்டது உன்னை
குளிர் விட்டது என்னை
பெண் : {நல்ல கோடைக்கால நேரத்திலும்
குளிரெடுப்பதேன்
உடல் குளிரெடுக்கும் காலத்திலும்
கொதித்திருப்பதேன்} (2)
ஆண் : இந்த கோவை இதழ் வெளுத்திருக்கும்
காரணம் என்ன
இந்த கோவை இதழ் வெளுத்திருக்கும்
காரணம் என்ன
உன் பால் விழிகள் சிவந்திருக்கும்
காரியம் என்ன
உன் பால் விழிகள் சிவந்திருக்கும்
காரியம் என்ன
பெண் : கண் பட்டது கொஞ்சம்
ஆண் : புண்பட்டது நெஞ்சம்
பெண் : கைத் தொட்டது உன்னை
ஆண் : குளிர் விட்டது என்னை
இருவர் : கண் பட்டது கொஞ்சம்
புண்பட்டது நெஞ்சம்
கைத் தொட்டது உன்னை
குளிர் விட்டது என்னை