Album | Ore Raththam |
Director | K. Sornam |
Producer | M. Suryanarayanan |
Composer | Devendran |
Starring | Karthik, Bhagyalakshmi, Madhuri, M. K. Stalin |
Actor | Karthik |
Singers | P Jayachandran, Uma Ramanan |
Lyricist | Vairamuthu |
Release Year | 1987 |
Singers : P. Jayachandran And Uma Ramanan
Music By : Devendran
Male : Thangamae Ingu Vaa
Female : Kanavaa Nijamthaanaa
Male : Kadhal Vanthaal Bedhamillaiyae
Jaadhi Illai Jaadhi Mullaiyae
Male : Ilamai…
Female : Ilamai Thuli Vittathu
Male : Indruthaan
Female : Indruthaan Kulir Vittathu
Male : Paruvam
Female : Paruvam Thottavudan Thaen Sottuthu
Male : Kadhal Vanthaal Pedhamillaiyae
Jaadhi Illai Jaadhi Mullaiyae….
Male : Karumbae Nee Karuppu
Adiyaen Konjam Sivappu
Irandum Kalanthaal Idhuvae Sirappu
Female : Adadaa Nalla Vilakkam
Adhuthaan Ungal Vazhakkam
Ungal Tamil Kettaal Irumbum Pazhukkum
Male : Gangaiyil Vizhunthaal Karaiyil Ezhuvaen
Mangai Mael Vizhunthaal Engu Naan Ezhuvaen
Female : Unmaiyil Neengal Kambanthaan
Idam Koduththaal Romba Vambuthaan
Male : Thangamae Ingu Vaa
Female : Kanavaa Nijamthaanaa
Yaezhai Kili Ingae Vanthathu
Jodi Kili Sontham Kondathu
Female : Oorukkul Idhu Pugaiyum
Adhanaal Varu Pagaiyum
Thinaiyai Vidhaiththaal Thinaithaan Vilaiyum
Male : Ilaigal Vizhum Varaikkum
Naaigal Konjam Kuraikkum
Panthigal Mudinthaal Vaalai Kuzhaikkum
Female : Kazhuththai Tharuvaen Kattalai Idungal
Kattalai Seitha Pin Thottilai Seiyungal
Male : Kuzhanthai Niram Karuppaa Illai Sivappaa
Padhi Sollammaa
Male : Thangamae Ingu Vaa
Female : Kanavaa Nijamthaanaa
Both : Kadhal Vanthaal Bedhamillaiyae
Jaadhi Illai Jaadhi Mullaiyae
Kadhal Vanthaal Bedhamillaiyae
Jaadhi Illai Jaadhi Mullaiyae
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் உமா ரமணன்
இசையமைப்பாளர் : தேவேந்திரன்
ஆண் : தங்கமே இங்கு வா
பெண் : கனவா நிஜம்தானா
ஆண் : காதல் வந்தால் பேதமில்லையே
ஜாதி இல்லை ஜாதி முல்லையே
ஆண் : இளமை….
பெண் : இளமை துளிர் விட்டது
ஆண் : இன்றுதான்….
பெண் : இன்றுதான் குளிர் விட்டது
ஆண் : பருவம்..
பெண் : பருவம் தொட்டவுடன் தேன் சொட்டுது
ஆண் : காதல் வந்தால் பேதமில்லையே
ஜாதி இல்லை ஜாதி முல்லையே..
ஆண் : கரும்பே நீ கறுப்பு
அடியேன் கொஞ்சம் சிவப்பு
இரண்டும் கலந்தால் இதுவே சிறப்பு
பெண் : அடடா நல்ல விளக்கம்
அதுதான் உங்கள் வழக்கம்
உங்கள் தமிழ் கேட்டால் இரும்பும் பழுக்கும்
ஆண் : கங்கையில் விழுந்தால் கரையில் எழுவேன்
மங்கை மேல் விழுந்தால் எங்கு நான் எழுவேன்
பெண் : உண்மையில் நீங்கள் கம்பன்தான்
இடம் கொடுத்தால் ரொம்ப வம்புதான்
ஆண் : தங்கமே இங்கு வா
பெண் : கனவா நிஜம்தானா
ஏழைக் கிளி இங்கே வந்தது
ஜோடிக் கிளி சொந்தம் கொண்டது..
பெண் : ஊருக்குள் இது புகையும்
அதனால் வரும் பகையும்
தினையை விதைத்தால் தினைதான் விளையும்
ஆண் : இலைகள் விழும் வரைக்கும்
நாய்கள் கொஞ்சம் குறைக்கும்
பந்திகள் முடிந்தால் வாலை குழைக்கும்
பெண் : கழுத்தை தருவேன் கட்டளை இடுங்கள்
கட்டிலை செய்த பின் தொட்டிலை செய்யுங்கள்
ஆண் : குழந்தை நிறம் கறுப்பா இல்லை சிவப்பா
பதில் சொல்லம்மா
ஆண் : தங்கமே….இங்கு வா..
பெண் : கனவா….நிஜம்தானா…
இருவர் : காதல் வந்தால் பேதமில்லையே
ஜாதி இல்லை ஜாதி முல்லையே….
காதல் வந்தால் பேதமில்லையே
ஜாதி இல்லை ஜாதி முல்லையே…